ஹோம் /கோயம்புத்தூர் /

வேளாண் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்.. கோவையில் மாணவர்கள் உற்சாகம்..

வேளாண் கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்.. கோவையில் மாணவர்கள் உற்சாகம்..

கோவை

கோவை

Coimbatore District News : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மண்டல அளவிளான விளையாட்டுப் போட்டிகள்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் துவங்கியுள்ளன.

கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேளாண் கல்லூகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை துவங்கியுள்ளன. இந்த போட்டிகள் வரும் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்நிகழ்வின் தொடக்க விழாவினை இன்று பல்கலைக்கழக விளையாட்டரங்கில் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி தேசிய மற்றும் பல்கலைக்கழக கொடிகளை ஏற்றியும், ஒலிம்பிக் விளக்கை ஏற்றியும் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரி விளையாட்டுச் செயலர்களின் தலைமையில் விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த 15 நாள் நிகழ்வை பல்கலைக்கழக மாணவ நல மையம் வரவேற்புரையாற்றி துவங்கினார்.

இதையும் படிங்க : கோவையில் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர் அறிவிப்பு..

கல்லூரி முதல்வர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துரை கூறினர்.இதனைத் தொடர்ந்து முதல் மண்டலமான 10 கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமானது.

முதற்கட்டமாக 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் 920 பேர் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். 10 வகையான உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுகள் இன்று நடைபெற்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த விளையாட்டு போட்டிகளில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

First published:

Tags: Coimbatore, Local News