கோவையில் இளம் பெண் ஒருவர் தனியார் நகரப் பேருந்தை இயக்குவது பெண் பயணிகள் மத்தியில் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலை போக்குவரத்துத் துறையில் பெண்களும் சாதிக்க முடியும் என்பதற்கான தூண்டுகோலாக இருக்கும் பெண் ஓட்டுநர் ஷர்மிளா-வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்திய ராணுவம் உட்பட அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருந்து வருகிறது. ஒரு சில துறைகளில் மிகக் குறைவான அளவில் மட்டுமே பெண்களின் பங்களிப்பு உள்ளது. குறிப்பாகக் கனரக வாகனங்களை இயக்குவதில் மிகக் குறைந்த அளவிலேயே பெண் ஓட்டுநர்கள் உள்ளனர்.
இந்நிலையில் கோவை வடவள்ளியை சேர்ந்த ஷர்மிளா என்ற இளம் பெண் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று கோவை நகரச் சாலைகளில் திறம்படத் தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். மருந்தியல் துறையில் பட்டப்படிப்பு படித்துள்ள பெண் ஓட்டுநர் ஷர்மிளா, வடவள்ளி பகுதியில் தனது தந்தை மகேசின் ஆட்டோவை அவ்வப்போது இயக்கி வந்துள்ளார். தந்தையின் ஊக்கத்தால் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற அவருக்குத் தனியார் பேருந்து நிறுவனம் ஓட்டுநராக பணிபுரிய வாய்ப்பளித்துள்ளது.
Also Read : கோவை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்.. சிறப்பம்சங்கள் என்னென்ன? - முழு விவரம்!
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று இருந்த போதும், பேருந்தை இயக்க வழித்தடம் கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷர்மிளா தெரிவித்தார். பெண் பேருந்து ஓட்டுவதற்கும், ஆண் பேருந்து ஓட்டுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என ஷர்மிளாவின் பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகள் தெரிவித்தனர். அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினர்.
தற்போது பேருந்தைத் திறம்பட இயக்கும் கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவின் முதல் நாள் பயணத்தில் இணைந்து பயணிப்பதில் நியூஸ் 18 பெருமிதம் கொள்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Woman, Women achievers