ஹோம் /கோயம்புத்தூர் /

துப்பாக்கிகளை எளிதாக கையாள வேண்டுமா..? கோவை ரைபிள் கிளப் வாங்க..!

துப்பாக்கிகளை எளிதாக கையாள வேண்டுமா..? கோவை ரைபிள் கிளப் வாங்க..!

X
கோவை

கோவை ரைபில் கிளப்

Coimbatore District News : கோவை மக்களே துப்பாக்கி சுடும் பயிற்சி பெற வேண்டுமா? இதோ விவரம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் ரைபிள் கிளப்பில் பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை பருவத்தில் இருந்தே துப்பாக்கி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். பொம்மை துப்பாக்கியை வைத்து நண்பர்களுடன் விளையாடி மகிழ்ந்த காலத்தை மறக்கமாட்டோம். ஆனால், துப்பாக்கி என்பது ஒரு விளையாட்டு பொருள் அல்ல என்பதை நாம் வளர்ந்த பின் தெரிந்திருப்போம்.

இலக்கை தாக்குவது துப்பாக்கியாக இருந்தாலும், அந்த இலக்கை குறி வைத்து துல்லியமாக தாக்குவதற்கு முறையான பயிற்சியும், மனக்கட்டுப்பாடும் அவசியம். அந்த வகையில் கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் ரைபில் கிளப் மாணவர்கள் மட்டுமல்லாது துப்பாக்கி சுடுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் இந்த பயிற்சியை வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : ஆபாசக்கூத்து.. கைதேர்ந்த கேடி... கவிஞர் தாமரை காட்டம்.. சிக்கலில் விஜி பழனிச்சாமி

கடந்த 1953ம் ஆண்டு இந்த ரைபில் கிளப் துவங்கப்பட்டது. இங்கு ரைபில், பிஸ்டல் மற்று ஷாட்கன் ரக துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன. பயிற்சிக்கு வருவோருக்கு துப்பாக்கியை கையாள்வது, குண்டுகளை பராமரிப்பது, இலக்கை குறி வைப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் ரேஞ்சு தளங்கள் கோயம்புத்தூர் ரைபில் கிளப்பில் உள்ளன. இந்த கிளப்பில் 12 வயது முதல் உறுப்பினராக இணையலாம். 12 வயது முதல் 18 வயதுடைய மாணவர்கள் ஆண்டு சந்தா 4,700 ரூபாய் செலுத்தி உறுப்பினராக இணையலாம். மற்றவர்களுக்கு வாழ்நாள் உறுப்பினர் சந்தா  2,95,000 ரூபாய் செலுத்த வேண்டும்.

இதில் பெரும்பாலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் 10 நாட்கள் மாணவர்களுக்கான கேம்ப் நடைபெறுகிறது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். மாநில, தேசிய மற்றும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கி இன்று கம்பீரமாக நிற்கிறது கோயம்புத்தூர் ரைபில் கிளப்.

துப்பாக்கி சுடுவது வெறும் பயிற்சி மட்டுமல்ல, இது ஒருவரை நெறிப்படுத்தவும், கவனச்சிதறலை கட்டுப்படுத்தவும் சிறந்தது என்கிறார் பயிற்சியாளர் ஸ்ரீநிதி அபிராமி. இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் கல்வியிலும், ஒழுக்கத்திலும் மேம்பட்டு வருவதாக பெருமை தெரிவிக்கிறார் ஸ்ரீநிதி.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News