முகப்பு /கோயம்புத்தூர் /

பைக் சாகச பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யமஹா.. குஷியில் கோவை இளைஞர்கள்..

பைக் சாகச பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யமஹா.. குஷியில் கோவை இளைஞர்கள்..

X
பைக்

பைக் சாகச பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யமஹா

Bike Stunt | கோவையில் யமஹா நிறுவனம் பைக் சாகச பிரியர்களுக்கு புது வாய்ப்பை வழங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

பைக் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு ரேஸ் டிராக்கில் பைக் ஓட்ட வேண்டும் என்பது கனவு என்று கூறலாம். வாழ்வில் ஒருமுறையாவது பைக் பந்தயத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்கள் அத்தனை பேருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்துவிடுவதில்லை.

இந்நிலையில், யமஹா மோட்டார் நிறுவனம் ரேஸ் டிராக்கில் பந்தய வீரர்கள் போல பைக்கில் சீறிப்பாயும் வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்கியுள்ளது. கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வே ரேஸ் டிராக்கில் யமஹா சார்பில் 'டிராக் டே' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கோவையில் 2வது ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட பைக் பிரியர்கள் கலந்து கொண்டு பந்தயம் நடைபெறும் ஓடுதளத்தில் தங்களது பைக் ஓட்டினர்.

பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள்

இதற்காக இளைஞர்களுக்கு பந்தய வீரர்கள் அணியும் பிரத்யேக உடை, காலணிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த 'டிராக் டே' நிகழ்வில் பங்கேற்ற இளைஞர்கள் முதல் முறையாக பந்தய வீரரைப் போல ரேஸ் டிராக்கில் கலந்துகொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News