யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. தங்களது பைக்குகளை வாங்கியுள்ள மற்றும் பைக் ரேசில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஒருமுறை பைக் ரேஸ் நடைபெறும் டிராக்கில் வாகனத்தை ஓட்டிப்பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
கோவை செட்டிபாளையம் பகுதியில் கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே என்ற பந்தய ஓடுதளம் (Race Track) உள்ளது. இங்கு கார் மற்றும் பைக் பந்தயங்கள் நடைபெறுவது வழக்கம். பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு நிறைய பணம் செலவாகும் என்று நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அதற்கான முயற்சியை முடக்கிப் போட்டிருக்கும் சூழலில் யமஹா நிறுவனம் அத்தகைய இளைஞர்களுக்கு ஒரு முறை கரி மோட்டார்ஸ் ஸ்பீடுவே 'ரேஸ் டிராக்கில்' வாகனத்தை ஓட்ட வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைக் மற்றும் ரேஸ் பிரியர்கள் கலந்து கொண்டு ரேஸ் டிராக்கில் முதல் முறையாக தங்களது பைக்கை ஓட்டினர்.

கோவை பந்தய ஓடுதளம்
யமஹா நிறுவனம் தயாரித்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்கியவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு முதல் முறையாக பந்தய வீரர்கள் பலர் தங்களது சாதனைகளை படைத்த இடத்தில் தாங்களும் பைக் ஓட்டியதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
முதல் முறையாக ரேஸ் டிராக்கில் பைக் ஓட்டுவது போன்று நினைக்காமல் ஒரு பைக் பந்தய வீரர் தனக்கான வாய்ப்பை பயன்படுத்துவது போல் இந்த இளைஞர்களும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பந்தயம் நடைபெறும் இடத்தில் தங்களது பைக்கில் சீறிப்பாய்ந்தனர்.

Coimbatore Race Track
முதல் முறையாக ஒரு பந்தய வீரரைப் போல் உணர்ந்ததாகவும், பைக் மீது மேலும் ஆர்வத்தை ஊட்டும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததாகவும் இளைஞர்கள் தெரிவித்தனர்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.