ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மக்களே.. கலப்படமே இல்லாத ஒரிஜினல் காளான் மசாலா சாப்பிடனுமா?

கோவை மக்களே.. கலப்படமே இல்லாத ஒரிஜினல் காளான் மசாலா சாப்பிடனுமா?

கோவை

கோவை

Coimbatore Street Food | கோவை வ.உ.சி பூங்கா மைதான சாலையில் 'சாதனா' என்ற பெயரில் செயல்பட்டு வரும் தட்டுக்கடையில் கலப்படமே இல்லாத ஒரிஜினல் காளான் சுவையாய் பரிமாறப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் கலப்படமே இல்லாத  ‘தட்டுக்கடை காளான்’ குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சாலையோரங்களில் கிடைக்கும் தட்டுக்கடை உணவுகள் கோவையில் மிகவும் பிரபலம். இங்கு ஏராளமான தொழிலாளர்கள் உள்ளதால், குறைந்த விலையில் உணவுகளுக்காக தகட்டுக்கடையை நாடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட தட்டுக்கடைகளில் உணவு வகைகள் மட்டுமல்லாது துரித உணவுகளும் கிடைக்கின்றன. நூடுல்ஸ், காளான், பேல்பூரி, மசால் பூரி, ப்ரைடு ரைஸ், காலிபிளவர் சில்லி, சில்லி சிக்கன் என்று வகை வகையான உணவுகள் கிடைக்கின்றன.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

இப்படிப்பட்ட துரித உணவுகள் தரமானதாக கிடைக்கிறதா? என்று கேட்டால் அது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. உதாரணத்திற்கு காளான் மசாலா நாம் கேட்கும் போது அதில் குறைந்தபட்சமே காளான் இருக்கும், காலிபிளவர் மற்றும் கான்பிளவர் மாவை சேர்த்து கலப்படமான காளான் மசாலாவை பல தட்டுக்கடைகள் விற்பனை செய்து வருகின்றன.

காளான் மசாலா

இதனிடையே வ.உ.சி பூங்கா மைதான சாலையில் 'சாதனா' என்ற பெயரில் செயல்பட்டு வரும் தட்டுக்கடையில் கலப்படமே இல்லாத ஒரிஜினல் காளான் சுவையாய் பரிமாறப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

கலப்பட காளான் மசாலா 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இந்த  தட்டுக்கடையில் 30 ரூபாய்க்கு சுவையான, தரமான காளான் மசாலா விற்பனை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வ.உ.சி பூங்கா மைதான் சென்றால் மறக்காமல் இந்த ஒரிஜினல் காளான் மசாலவை சுவைத்துப்பாருங்கள்

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Food, Local News