கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புகையிலையின் தீமைகளை விளக்கும் டிஜிட்டல் ஃபிளிப்புக் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த ஆன்லைன் புத்தகத்தில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மருத்துவர் மற்றும் நோயாளிக்கு இடையே நடைபெறும் உரையாடல் கார்டூன் வடிவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் இயக்குனர் குகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர துணை ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டு டிஜிட்டல் ஃபிளிப்புக்கை அறிமுகப்படுத்தினார்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் 15 பக்கங்கள் கொண்ட இந்த ஃபிளிப்புக்-ஐ www.nosmokingsrior2022.digione.in என்ற இணைய முகவரியில் காணலாம்.
புகையிலை பழக்கத்தால் ஏற்படும் தீங்கு பற்றி புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மைய இயக்குனர் குகன் கூறுகையில் “புகையிலையால் ஏற்படும் தீமைகள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள் என்ன என்பது தொடர்பான உரையாடல்கள் மற்றும் அனிமேஷன் வீடியோ விழிப்புணர்வுத் தகவல் இந்த ஃபிளிப்புக்கில் உள்ளது. இந்த ஃபிளிப்புக், ஒரு புத்தகத்தின் பக்கங்களை புரட்டுவது போன்ற உணர்வை கொடுக்கும் படி வடிவமைக்க பட்டுள்ளது.
ஒவ்வொரு பக்கத்திலும் புகையிலை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே இது முதல் முயற்சி. சிகரெட்டில் இருந்து வரும் புகையில் குறைந்தது 50 புற்றுநோயை உண்டாக்கும் இரசாயனங்கள் (கார்சினோஜென்கள்) உள்ளன. அவை நுரையீரல் புற்றுநோயை மட்டும் ஏற்படுத்துவதில்லை, ஆனால் அவை தொண்டை, உணவு-குழாய், கல்லீரல், பித்தப்பை, இதயம், கணையம், சிறுநீர் ஆகியவற்றை பாதிக்கின்றன.
சிறுநீர்ப்பை, சிறுநீரகம் மற்றும் சில சமயங்களில் இரத்த புற்றுநோய் கூட ஏற்படலாம். புகைபிடிப்பவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் 30-40 சதவீதம் அதிகரிக்கும்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cancer, Coimbatore, Smoking