ஹோம் /கோயம்புத்தூர் /

எகிறும் விலைவாசி.. கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எகிறும் விலைவாசி.. கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

X
மாதர்

மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் தாயுள்ளம் கொண்டு விலை வாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என கோரிக்கை.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் மின்சார வரி, பால் விலை மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்து வரி உயர்வைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர்ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.அந்த வகையில்இந்திய தேசிய மாதர் சம்மேளனம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றது.

அதன்படி, கோவையில் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும், வரிகளை குறைக்க வேண்டும் என்றும், விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ALSO READ | கோவையில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்.. அச்சத்தில் வாழும் மக்கள்..!

இதுகுறித்து இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் கோவை மாவட்ட கன்வீனர் சாந்தி சந்திரன் கூறுகையில், "தினமும் 300 ரூபாய்க்கு கீழ் ஊதியம் பெற்று சாமானிய மக்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான பால்மற்றும் மின்சார கட்டணம் உயர்வு நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களை கடுமையாக பாதிக்கிறது. எனவே தமிழக முதலமைச்சர் தாயுள்ளம் கொண்டு விலையேற்றத்தை திரும்பப் பெற வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

First published:

Tags: Coimbatore, Local News, Protest