கோவை பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கோவை மாநகராட்சியின் 41வது வார்டு கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட நாளிலிருந்து தனது வார்டை முன்மாதிரியான வார்டாக மாற்றுவதற்கான பணியை மேற்கொண்டு வருகிறார்.
தினமும் காலை தூய்மை பணியாளர்களுடன் இணைந்து வீதிகளை சுத்தம் செய்தல், தனது வார்டில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தல், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி இலவச கல்வியைப் பெற தனது வார்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவை தவிர, தொழிலாளர் நல வாரியத்தில் கிடைக்கும் பயன்கள் குறித்து பல்வேறு துறை தொழிலாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு நலவாரிய பயன்களை பெற்றுக் கொடுக்கிறார். மேலும், முதியோர் உதவித்தொகை, முதிர் கன்னி மற்றும் விதவைகளுக்கான உதவித் தொகைகள் உரியவர்களுக்கு கிடைக்கவும் உதவி செய்து வருகிறார். அயராது மக்கள் பணியாற்றும் இவரை அந்த வார்டு மக்கள் எந்த நேரத்திலும் அணுகும் படி எளிமையை கடைபிடிக்கிறார்.
மாநகராட்சி நிர்வாகம் மேம்பாட்டு பணிகளுக்காக நிதி ஒதுக்கும் போது அதில் இலவச உடற்பயிற்சி நிலையம், சமூக நலக்கூடம் அமைத்தல், இ-சேவை மையம் கொண்டுவருதல் உள்ளிட்ட திட்டங்களையும் வைத்துள்ளார்.
எந்த நேரமும் மக்கள் சேவை புரியும் இவர் மற்ற கவுன்சிலர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.