ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் திரையிடப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டும் விட்னஸ் திரைப்படம்..!

கோவையில் திரையிடப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக காட்டும் விட்னஸ் திரைப்படம்..!

X
கோவையில்

கோவையில் திரையிடப்பட்ட விட்னஸ் திரைப்படம்

witness movie screening in coimbatore : மலக்குழி மரணம் குறித்த திரைப்படம் கோவையில் திரையிடல்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

மலக்குழிகள் மரணம் தொடர்பான விழிப்புணர்வு திரைப்படமான விட்னஸ் கோவையில் சமூக செயற்பாட்டாளர்கள் முன்னிலையில் திரையிடப்பட்டு இதுதொடர்பான உரையாடல் நடைபெற்றது.

இயக்குனர் தீபக் இயக்கத்தில் விட்னஸ் திரைப்படம் உருவாகி வெளியாகியுள்ளது. மனித கழிவுகளை மனிதனே சுத்தப்படுத்தி அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் ஒ.டி.டி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இதனிடையே கோவையில் விட்னஸ் திரைப்படம் குறித்த விழிப்புணர்வு உரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் முற்போக்கு இயக்கங்கள், சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

கோவை ரயில் நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் கலந்துகொண்டார்.

இதையும் படிங்க : சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள்... கோவை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு

இந்த உரையாடலின் ஒரு பகுதியாக, விட்னஸ் திரைப்படம் திரையிடப்பட்டது. மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்க வேண்டியே இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு, தற்போது திரையிடப்பட்டதாக தயாரிப்பு குழுவினர் தெரிவித்தனர்.

செய்தியாளர் : சவுந்தர் மோகன் - கோயம்புத்தூர்

First published:

Tags: Coimbatore, Local News