முகப்பு /கோயம்புத்தூர் /

காமெடி பீஸாக மாறிய பாகுபலி காட்டு யானை..! ஆச்சர்யத்துடன் பார்த்த கோவை மக்கள்..!

காமெடி பீஸாக மாறிய பாகுபலி காட்டு யானை..! ஆச்சர்யத்துடன் பார்த்த கோவை மக்கள்..!

X
ஜாலியாக

ஜாலியாக உலா வரும் காட்டு யானை

Wild Elephant Bahubali : மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானை பாகுபலி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து ஹாயாக வாக்கிங் சென்று வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரத்திற்குட்பட்ட நெல்லிமலை அடிவாரத்தில் குரும்பனூர், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டு யானை, காட்டுப்பன்றி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு விளை நிலங்களில் நுழைந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை பாகுபலியுடன்‌ கூடுதலாக 3 காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. குறிப்பாக அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும் சமயபுரம் கிராமத்தில் உள்ள கிராம சாலையை கடந்து செல்கின்றன. ஊருக்கு மத்தியில் உள்ள இந்த சாலையில் தினமும் காலை, மாலை வேளைகளில் உலா வரும் காட்டு யானைகள் சற்று மாறுபட்டு கால்நடைகளுடன் 'ஹாயாக வாக்கிங்' வந்தது.

சமயபுரம் பகுதியில் பசு மாடுகளை சிலர் வளர்த்து வரும் நிலையில் அந்த மாடுகள் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு சென்று விட்டு திரும்பி ஊருக்குள் வந்தபோது அந்த பசு மாடுகளை பின்தொடர்ந்து காட்டு யானை பாகுபலி மட்டுமல்லாமல் மற்ற யானைகளும் வாக்கிங் வருவது போல் பசு மாடுகளுக்கு எந்த அச்சுறுத்தலும் இன்றி ஒய்யாரமாக நடந்து வந்ததை அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாகவும், சற்று அச்சத்துடன் பார்த்தனர்.

ஜாலியாக உலா வரும் காட்டு யானை

இதையும் படிங்க : யப்பா என்னா வெயிலு..! வெப்பத்தை தணிக்க ஆனந்த குளியல் போட்ட திருநள்ளாறு கோவில் யானை..!

அப்பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இதுவரை காட்டு யானை பாகுபலி எவரையும் தாக்கியதில்லை என்பதால் சமயபுரம் பகுதி மக்களின் ஒரு குடும்ப நபராகவே மாறிவருகிறது காட்டு யானை பாகுபலி. இதிலும் ஒருசில யானைகள் குடியிருப்புக்குள் அங்கும் இங்கும் ஓடுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News