ஹோம் /கோயம்புத்தூர் /

Coimbatore | ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன் தெரியுமா? 

Coimbatore | ஆடி மாதத்தில் தம்பதிகளை பிரித்து வைப்பது ஏன் தெரியுமா? 

மாதிரிப்

மாதிரிப் படம்

Coimbatore | தமிழ்நாட்டில் ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதிகளை பிரித்துவைக்கும் வழக்கம் இருப்பதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணங்களைக் கூறிவருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமான மாதம். இந்த மாதத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் புதிதாக திருமணமான தம்பதிகளை, திருமணத்திற்கு பிறகு வரும் முதல் ஆடி மாதத்தில் பிரித்து வைப்பது தமிழகத்தில் தொன்று தொட்டு கடைபிடிக்கும் வழக்கம்.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தில் கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறையும். அதனால் சண்டைகள் எழக்கூடும் என்று சிலரும், ஆடி மாதத்தில் பெண்கள் கோபம் அதிகரிக்கும் என்று சிலரும் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் கூறி வருகின்றனர்.

ஆனால் உண்மை என்ன? ஏன் ஆடி மாத்தில் தம்பதிகளை பிரித்து வைக்கிறார்கள்?

ஆடி மாதம் இன்னும் ஒரு சில நாட்களில் துவங்க உள்ள நிலையில் இது குறித்து கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த ஜோதிடர் பிரசன்ன சுவாமிகள் கூறியதாவது, ‘ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகவும் கூழ் வார்க்கும் மாதமாகவும் உள்ளது.

இந்த மாதத்தில் தம்பதிகள் ஒன்றிணையக்கூடாது என்று நமது முன்னோர்கள் வழிகாட்டியுள்ளனர். ஏனென்றால் ஆடி மாதத்தில் கணவன் மனைவி கூடினால் அடுத்த 10 மாதத்தில் அந்த பெண் பிரசவிக்கும் சூழல் உருவாகும்.

அப்படி வரும் 10வது மாதம் வெயில் காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் ஒரு பெண் பிரசவித்தால் அவளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகமாக இருக்கும். பிரசவத்தின் போது ஏற்படும் புண்கள் வெயிலின் தாக்கத்தால் எரிச்சலை உருவாக்கும். இதனால் தான் கணவன் மனைவியை ஆடி மாதத்தில் பிரித்து வைக்கிறார்கள்.

தவிர இந்த மாதத்தில் கணவன் மனைவி கூடினால் குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை’ என்று தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthick S
First published:

Tags: Coimbatore, Local News