முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / கோவையில் பிடிப்பட்ட வெள்ளை நிற நாகப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு...

கோவையில் பிடிப்பட்ட வெள்ளை நிற நாகப்பாம்பு வனப்பகுதியில் விடுவிப்பு...

வெள்ளை நாக பாம்பு

வெள்ளை நாக பாம்பு

Coimbatore | கோவை குறிச்சி பகுதியில் வெள்ளை நிற நாகப்பாம்பை மீட்ட வன ஆர்வலர்கள் அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை குறிச்சி சக்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் வெள்ளை நிற பாம்பு இருப்பதாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற வன ஆர்வலர்கள் அந்த வெள்ளை நிற நாகத்தை காயமின்றி பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை கோவை வனத்துறை அதிகாரகளிடம் ஒப்படைத்தனர்.

வனத் துறையினர் அந்த வெள்ளை நிற நாகத்தை அடர் வனப்பகுதியில் விடுவித்தனர். இரண்டாம் தேதி இரவு இந்த வெள்ளை நிற நாகம் பிடிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை அடர் வனப்பகுதியில் விடுவிக்கபட்டது. அல்பினோ கோப்ரா என்ற வகையை சேர்ந்த இந்த நாகப்பாம்பு மரபணு பிரச்சினை காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும், இது போன்ற மரபணு மற்றும் நிறமிகளில் இருக்கும் பாம்புகள் பிரச்சனைகளால்  வெள்ளைநிறத்தில் இருக்கும் எனவும் வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Also see... Chandra Grahanam 2023 : சந்திர கிரகணத்தின் போது மறக்காமல் இந்த எளிய பரிகாரங்களை செய்யுங்க!

top videos

    ஏற்கனவே கடந்த 2019 ம் ஆண்டும் கோவை மதுக்கரை பகுதியல் இதே போன்ற வெள்ளை நிற பாம்பு மீட்கப்பட்டது குறிப்பிடதக்கது..

    First published:

    Tags: Coimbatore, Snake