ஹோம் /கோயம்புத்தூர் /

வெட்டிய முடியை எங்கே கொட்டுவது? - கோவை மாநகராட்சியை கேள்வி கேட்கும் சலூன் உரிமையாளர்கள்!

வெட்டிய முடியை எங்கே கொட்டுவது? - கோவை மாநகராட்சியை கேள்வி கேட்கும் சலூன் உரிமையாளர்கள்!

கோவை

கோவை

Coimbatore District News : வெட்டிய முடியை எங்கே கொட்டுவது? கோவை மாநகராட்சியை கேள்வி கேட்கும் சலூன் உரிமையாளர்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் செயல்படும் சலூன் கடைகளில் சேகரிக்கப்படும் முடி கழிவுகளை தூய்மை பணியாளர்கள் சேகரிக்க வேண்டும் என்று சலூன் தொழிலாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சலூன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் சேகரிக்கப்படும் முடி கழிவுகளை சலூன் தொழிலாளர்கள் பிளாஸ்டிக் பைகளில் அடைத்து, குப்பைத் தொட்டிகளில் போடுவது வழக்கம்.

இதனிடையே முடி கழிவுகள் சாலைகளில் சிதறி இருந்தால், சலூன் கடை நடத்துபவருக்கு 2 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலிக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள்.

இதையும் படிங்க : கோவை வழியாக வரும் இந்த ரயில்களுக்கு நேரம் மாற்றம் - ரயில்வே நிர்வாகம் தகவல்!

தூய்மை பணியாளர்களை வைத்து தினமும் சலூன் கடைகளில் கேகரிக்கப்படும் கழிவுகளை எடுக்க நடவடிக்கை எடுக்காமல், அதை குப்பை தொட்டியில் கொட்டும் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பது எந்த வகையில் நியாயம் என  சலூன் கடை உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News