Home /coimbatore /

பெண்கள் சைபர் குற்றங்களில் இருந்து தற்காப்பது எப்படி? கோவை கொங்கு நாடு கல்லூரியில் நடந்த வழிகாட்டல் நிகழ்ச்சி...

பெண்கள் சைபர் குற்றங்களில் இருந்து தற்காப்பது எப்படி? கோவை கொங்கு நாடு கல்லூரியில் நடந்த வழிகாட்டல் நிகழ்ச்சி...

கோவையில்

கோவையில் பெண்களுக்கு பிரச்னையா? எங்கு, எப்படி புகார் அளிப்பது?

Coimbatore District News : கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முறை குறித்து விழிப்புணர்வு தரப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவையில் பெண்கள் தங்களை சைபர் குற்றங்களிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கில் தமிழக மகளிர் ஆணைய தலைவி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கோவை கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாள் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவிகள் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் முறை, சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி மகளிர் ஆணையத்தை அணுகுவது போன்றவை கலந்துரையாடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக மகளிர் ஆணைய தலைவி குமாரி, வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ பெண்கள் பாதிக்கப்பட்டால் காவல் நிலையம் சென்று தான் புகார் கொடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும், சமூக நலத்துறையிலேயே புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை அலுவலகத்தில் பெண்கள் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி