முகப்பு /கோயம்புத்தூர் /

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே..? கோவையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எங்கே..? கோவையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

X
இளைஞர்

இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

Coimbatore Youth Congress Protest | சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

மத்திய அரசின் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி கோவை இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

மத்திய அரசின் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கோவை காந்திபார்க் பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கோவை வடக்கு மாவட்டம் சார்பில் பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வடக்கு மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்பட வில்லை எனவும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விகுறி ஆகிவிட்டதாகவும் முழக்கங்களை எழுப்பினர்.

First published:

Tags: Coimbatore, Local News