ஹோம் /கோயம்புத்தூர் /

கொப்பரை தேங்காய் விற்பனை - கோவை விவசாயிகளுக்கு நிலுவை தொகை எப்போது கிடைக்கும்?

கொப்பரை தேங்காய் விற்பனை - கோவை விவசாயிகளுக்கு நிலுவை தொகை எப்போது கிடைக்கும்?

கொப்பரை தேங்காய்

கொப்பரை தேங்காய்

Coimbatore Farmers | கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்திருப்பதாகவும், 32 ரூபாய் கோடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது எனவும் மாவட்ட விற்பனை குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ரூ.32 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவலை விற்பனை குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு பெய்த பருவமழைகளின் காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்தது. இதனால், கொப்பரை தேங்காய் கொள்முதல் , விலை வீழ்ச்சி அடைந்தது. அத்துடன், வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைந்தது. இதன் காரணமாக விவசாயிகளிடம் இருந்து அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, செஞ்சேரிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 31ஆம்தேதியுடன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான காலம் முடிந்தது. இதனால் வெளிமார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் விலை குறைந்ததால் மத்திய அரசு கொப்பரை தேங்காய் கொள்முதல் தேதியை நீட்டித்து உத்தரவிட்டது.

Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா?

அதன்படி கடந்த (அக்டோபர் மாதம்) 31ஆம் தேதி வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் காலம் நிறைவடைந்தது. இதுகுறித்து கோவை விற்பனை குழு முதுநிலை செயலாளர் சாவித்திரி கூறுகையில், 18 ஆயிரம் மெட்ரிக் டன் தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதார திட்டத்தின் கீழ் கோவை வேளாண் விற்பனை குழு பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரிமலை, அன்னூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கிலோ ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுவரையில், சுமார் 18 ஆயிரம் விவசாயிகளிடம் இருந்து ஏறக்குறைய 18 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி விவசாயிகளிடம் இருந்து ரூ.185 கோடிக்கு கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் இன்னும் 32 ரூபாய் கோடி விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உள்ளது. ஒரு வார காலத்திற்குள் அனைத்து விவசாயிகளுக்கும் கொள்முதல் செய்தற்கான பணம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Coconut, Coimbatore, Farmers, Local News