ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் பேரிடர் காலத்தில் என்ன செய்ய வேண்டும்... மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் கொடுத்த தீயணைப்புத்துறை...

கோவையில் பேரிடர் காலத்தில் என்ன செய்ய வேண்டும்... மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் கொடுத்த தீயணைப்புத்துறை...

X
தீயணைப்பு

தீயணைப்பு துறை மீட்பு ஒத்திகை

Kovai | பேரிடர் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு தீயணைப்புத்துறை செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

பேரிடர் காலத்தில் தம்மை தற்காத்துக்கொண்டு பிறரையும் பாதுகாப்பது எப்படி என்பது குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட தீயணைப்புத்துறையினர் இன்று நடத்தினர்.

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை மற்றும் தனியார் நிறுவனம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதில் தீயணைப்பு துறையை சேர்ந்த அதிகாரிகள் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

இதையும் படிங்க : கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

பயிற்சியில் புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, மீட்பு பணி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது விபத்தோ அல்லது கட்டிடம் இடிந்து விபத்து நிகழ்ந்தாலோ உடனடியாக விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத்துறையினர் தத்ரூபமாக நடித்து காண்பித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி கையாள்வது என்பது குறித்த செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Coimbatore, Local News