ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை கார் வெடிப்பு சம்பவ இடத்தின் தற்போதைய  நிலை என்ன?

கோவை கார் வெடிப்பு சம்பவ இடத்தின் தற்போதைய  நிலை என்ன?

கோவை

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி

Coimbatore Car Blast spot : கோவை டவுன்ஹால் அருகே அமைந்துள்ளது கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி. இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இப்படியான கோவில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. சம்பவ இடத்தின் தற்போதைய  நிலை என்ன? :

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதியில் கார் வெடித்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில், சம்பவ இடத்தில் இயல்புநிலை திரும்பியதா என்பதை அறிய அங்கு ஒரு நேரடி விசிட் அடித்தோம்..

கோவை டவுன்ஹால் அருகே அமைந்துள்ளது கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி. இங்கு அமைந்துள்ள சங்கமேஸ்வரர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. கரிகலாச்சோழனால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இந்த கோவிலில் பிற்காலத்தில் விஜயநகர பேரரசு புனரமைப்பு பணிகளை மேற்கொண்டது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில்

கோவையில் உள்ள பழம்பெரும் கோவில்களில் இந்த கோவிலும் ஒன்று. இப்படியான கோவில் முன்பு கடந்த மாதம் 23ம் தேதி கார் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க துவங்கியுள்ள தேசிய புலனாய்வு முகமை, காரில் இருந்தவை வெடிபொருட்கள் என்றும், காரில் உயிரிழந்த நபரின் வீட்டில் இருந்து அபாயகரமான வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிக்கை பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க:  கும்பகோணத்தில் பிறந்து மலையாளத்தில் பிரபலமான நடிகர் - யார் தெரியுமா?

சம்பவம் நடைபெற்ற தினத்தில் இருந்தே கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள சாம்ராவீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட 7க்கும் மேற்பட்ட வீதிகள் முழுமையாக காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்தன. இதனால் அப்பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அடைக்கப்பட்டுள்ள கடைகள்

புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருவதால் அவ்வப்போது இந்த வீதி முழுமையாக அடைக்கப்பட்டு போலீஸ் கெடுபிடி அதிகப்படுத்தப்படுகிறது. இதனால் பக்கத்துத் தெருவுக்கு செல்வதற்கு கூட இரண்டு வீதிகள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தடுப்புகள் அமைத்துள்ள போலீசா

மளிகைக்கடை, பேக்கரி, துணிக்கடை உள்ளிட்ட கடைகள் உள்ள இப்பகுதியில் தற்போது வியாபாரம் சரிந்துள்ளது. மேற்படி சம்பவத்தின் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

மேலும் படிக்க:  உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

திருமண நிகழ்வின் போது உப்பு ஜவுளி என்ற பெயரில் மணமகன் மணமகளுக்கு புத்தாடைகள் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கும் மக்கள் கோவையில் கோனியம்மன் கோவில் மற்றும் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று தங்களது வேண்டுதல்களை முடித்துவிட்டு புத்தாடைகள் வாங்கச் செல்வார்கள்.

இந்த சம்பவத்தால் முகூர்த்த தினங்களில் கூட யாரும் கோவிலுக்கு வரவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவில் அருகேயுள்ள கடை வியாபாரிகள் சொல்வதென்ன?

இதனிடையே கார் வெடித்த போது, கோவிலுக்குச் சொந்தமான இடத்திலிருந்த கடைகள் சேதமடைந்துள்ளன. அங்கு பூஜை சாமான்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள ஹமீதா, முகூர்த்த தினங்கள் வருவதால் தனது கடைக்கு முன் வைத்திருந்த பெட்டியில், புதிதாக பூஜை சாமன்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறார். வெடி விபத்தில் அவரது பெட்டி தீக்கிரையானது. இதே போல் இஸ்திரி கடை வைத்திருக்கும் ஸ்வேதாவின் கடை கூரை வெடி விபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹமீதா

அவர்கள் கடைக்கு வெளியே வைத்திருந்த டேபிள் ஒன்று தீயில் கருகி வீணானது. சம்பவம் நடந்து தற்போது மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்று நினைக்கும் போது அடுத்தடுத்த சோதனைகள் மற்றும் அரசியல் கட்சியினர் வருகை உள்ளிட்ட காரணங்களால் போலீஸ் கெடுபிடி அதிகரித்து இப்பகுதி மக்கள் இயல்பான வாழ்வை வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க:  இந்த தெருவுக்குள்ள நுழைஞ்சாலே மிரண்டு போவீங்க..! மதுரை 10 தூண் சந்து சிறப்புகள்..!

இதனிடையே கார் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகளான தங்களுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விசாரணை ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதோடு, இந்த கோவிலைச் சுற்றி வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப அரசு உடனடி வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News