ஹோம் /கோயம்புத்தூர் /

காணும் பொங்கல் என்றால் என்ன? விழிபிதுங்கிய கோவை இளைஞர்கள்!

காணும் பொங்கல் என்றால் என்ன? விழிபிதுங்கிய கோவை இளைஞர்கள்!

X
இளைஞர்கள்

இளைஞர்கள் கருத்து

Coimbatore | கோவை மாவட்ட இளைஞர்களிடம் பொங்கல் திருவிழா குறித்த கேள்வி கேட்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்டிகையான

பொங்கல் மொத்தம் நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப்பண்டிகையாகவும், தை மாதத்தின் முதல் நாள் தைப்பொங்கல், இரண்டாம் நாள் மாட்டு பொங்கல், தை மாதத்தின் மூன்றாம் நாள் கொண்டாடப்படுவது கன்னி பொங்கல் என்று சொல்லக்கூடிய காணும் பொங்கல் ஆகும்.

காணும் பொங்கல் தினத்தில் உற்றார், உறவினர், நண்பர்களை பார்த்து அவர்களுடன் நேரத்தை கழித்து, பெரியோரின் ஆசி பெறுதவது உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

அதோடு, வீட்டில் வித விதமான உணவு பண்டங்களை சமைத்து அதனை உறவினர்களோடு பகிர்ந்து உண்பார்கள்.

இந்த தினத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ஆயிரக்கணக்கான பேரை ஒரே இடத்தில் காண்பதற்காக இத்தகைய போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்த நன்நாளில் நமது உறவுகள், நட்புகள் மட்டுமல்ல நமக்கு அறிமுகம் இல்லாத அக்கம் பக்கத்தினரை மற்றும் நாம் விரும்பாதவர்களையும் தேடி சென்று சிரித்து, ஆனந்தமாய் பேச வேண்டும்.

இத்தகைய தினம் ஒன்று இருப்பதை இளைய சமூகம் மறந்து வரும் சூழலில், காணும் பொங்கல் என்றால் என்ன? இந்த தினத்தில் என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட கேள்விகளை கோவையை சேர்ந்த இளைஞர்களிடம் எழுப்பினோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்களை இந்த காணொளியில் காணலாம்.

First published:

Tags: Coimbatore, Local News, Pongal 2023