முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ... ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு வாரமாக பற்றி எரியும் காட்டுத்தீ... ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரம்!

கோவை வனப்பகுதிகளில் காட்டு தீ

கோவை வனப்பகுதிகளில் காட்டு தீ

Western Ghats Forest Fire | சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம், நாதேகவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை அணைக்க, ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டுள்ளது.

நாதேகவுண்டன்புதூரை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. காட்டு தீயை அணைக்க கூடிய பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஒரு வாரத்தில் சுமார் நூறு ஏக்கருக்கும் அதிகமாக பரப்பளவு வனப்பகுதி காட்டுத்தீயால் நாசமானது.

நேற்று காட்டுத்தீ பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரவு முதல் மீண்டும் வேகமாக பரவியது.

இதையும் படிங்க: வெயில் காலம் என்பதால் உதடுகள் கருத்து காய்ந்து போகுதா..? இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

இன்று சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் நேரில் பார்வையிட்டு தீயணைப்பு பணிகளை விரைவுபடுத்தினார். கோவை மாவட்டம் நாதே கவுண்டன்புதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தபட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Coimbatore, Wildfires