ஹோம் /கோயம்புத்தூர் /

கிணற்றை காணோம்.. வடிவேலு பாணியில் ஆட்சியரிடம் புகார் அளித்த கோவை மக்கள்

கிணற்றை காணோம்.. வடிவேலு பாணியில் ஆட்சியரிடம் புகார் அளித்த கோவை மக்கள்

X
ஆட்சியர்

ஆட்சியர் அலுவலகம் வந்த மக்கள்

Coimbatore Wall missing Petition | ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

வடிவேலு பட பாணியில் கிணற்றை காணோம் என்று கூறி கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோவையைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம் பேரூரை அடுத்து விவேகானந்தர் நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 1990ம் ஆண்டு 20 ஏக்கர் நிலம் 365 மனைப்பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. தற்போது இந்த பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 70 சென்ட் இடம் ரிசர்வ் சைட்டாக விடப்பட்டது.

சம்மந்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்களின் பொது பயன்பாட்டிற்காக விடப்பட்ட இடத்தை மனையை விற்பனை செய்தவர் தற்போது ஆக்கிரமித்து அதனை விற்பனை செய்ய முயற்சிப்பதாகவும், அந்த பகுதியில் இருந்த கிணறும் தற்போது மாயமாகிவிட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனிடையே விவேகானந்தர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு இதுகுறித்து புகார் அளித்தனர். ரிசர்வ் சைட்டை ஆக்கிரமித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அங்கு ஊராட்சிக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News