முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் இந்த பகுதிகளிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் வேணும்..! எதிர்பார்ப்பில் மக்கள்..!

கோவையில் இந்த பகுதிகளிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் வேணும்..! எதிர்பார்ப்பில் மக்கள்..!

X
ஹேப்பி

ஹேப்பி ஸ்ட்ரீட்

Happy Street in Kovai : கோவையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்த மக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் மற்றும் ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெறுவதை போன்று பீளமேடு, ஹோப்ஸ் மற்றும் சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிப்புதூரை உள்ளடக்கிய பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்த மக்கள் கோரிக்கை விடுதுள்ளனர்.

கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தை பெற்றது முதல் நகரில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குளக்கரைகளை அழகுபடுத்துதல், விளையாட்டு அம்சங்களை அமைத்தல், சாலைகளில் எல்.இ.டி விளக்குகளை பொருத்துதல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை நேரத்தில் மக்கள் சாலைகளில் விளையாடி மகிழும் விதமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த வாரம் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் நடைபெற்றது.

ஹேப்பி ஸ்ட்ரீட்

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடினர். மேலும், ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. இதில் சிலர் சிலம்பம் சுற்றுதல், தற்காப்பு கலைகள் மற்றும் நடனம், சைக்கிள் சாகசம் போன்ற தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதையும் படிங்க : கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்..

அதேபோல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் பாரம்பரிய கலைஞர்கள் பொய்க்கால் குதிரை கலையை நிகழ்த்திக் காட்டியது பலரது கவனத்தையும் ஈர்த்தது. கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட கோவையின் பல்வேறு பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் கோவையில், தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க வகையில் எந்த பொழுதுபோக்கு அம்சங்களும் நிறுவப்படவில்லை. இதேபோலவே, ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியும் மற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் குறிப்பிட்ட சில பகுதிகளை உள்ளடக்கியே நடைபெறுகின்றன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இத்தகைய பொழுதுபோக்கு அம்சங்கள் கோவையில் வசிக்கும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. எனவே பீளமேடு, சிங்காநல்லூர் மற்றும் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் பயன்பெறும் வகையில் பொதுவான மற்றொரு இடத்திலும் ஹேப்பி ஸ்ட்ரீட் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த மாநகராட்சி நிர்வாகம் முனைப்பு காட்ட வேண்டும் என்று கோவை வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்சி சாலை மற்றும் அவினாசி சாலையை இணைக்கும் விதமாக செல்லும் ஜி.வி.ரெசிடெண்சி பகுதியில் ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்த ஏற்ற வகையில் ஏராளமான இணைப்பு சாலைகள் உள்ளன. இந்த பகுதியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்பது ஒரு சின்ன ஐடியா. ஸ்மார்ட்-ஆக வேலை பார்க்கும் நம்ம ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகள் கோவை மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

First published:

Tags: Coimbatore, Local News