முகப்பு /கோயம்புத்தூர் /

‘கோவையின் காவல் தெய்வம்’ கோனியம்மன் கோவில் தேரோட்டம்.. உப்பு, மிளகாய் வீசி பக்தர்கள் சாமி தரிசனம்..

‘கோவையின் காவல் தெய்வம்’ கோனியம்மன் கோவில் தேரோட்டம்.. உப்பு, மிளகாய் வீசி பக்தர்கள் சாமி தரிசனம்..

X
கோனியம்மன்

கோனியம்மன் கோவில் தேரோட்டம்

Coimbatore News | கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை டவுன்ஹால் பகுதியில் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ளது கோனியம்மன் கோவில். கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலின் மாசித் தேரோட்டம் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டு மாசித் தேரோட்டத்துக்கான முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பிப்ரவரி 14ம் தேதி பூச்சாட்டு நிகழ்வும், 21ம் தேதி கொடியேற்றம் மற்றும் அக்னிச்சாட்டும் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து நாள்தோறும் மாலை 6.30 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதனிடையே கோனியம்மன் கோவில் திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்டத்தை காண வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது. தேர் நிலை திடலில் துவங்கிய இந்த தேரோட்டம் ஒப்பணக்கார வீதி வழியாக பிரகாசம் பகுதியை வந்தடைந்து, அதனைத் தொடர்ந்து பெரிய கடைவீதி வழியாக வைசியாள் வீதியை அடைந்து மீண்டும் தேர் நிலை திடலை வந்தடைந்தது.

தேர் வலம் வரும் பகுதி முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள் உப்பு மற்றும் மிளகு வீசி அம்மனை வழிபட்டனர். தேரோட்டத்தை காண கோவை மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிந்து தேரோட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். பல்வேறு இடங்களில் தன்னார்வலர்கள் பொதுமக்களுக்கு நீர்மோர், பானகம், குளிர்பானங்கள், பழங்கள், உணவுகள் ஆகியவற்றை வழங்கினர்.

இதையும் படிங்க : அச்சுறுத்தும் சுள்ளி கொம்பன் யானை- அச்சத்தில் பொள்ளாச்சி மக்கள்

தேர் சுற்றி வரும் பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிகளை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

First published:

Tags: Coimbatore, Local News