முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் மாணவர்கள்!

கோவையில் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் மாணவர்கள்!

X
மின்னணு

மின்னணு கழிவுகள்

Coimbatore students | கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், மின்னணு கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னணு கழிவுகளை சேகரிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் தீவிரமாக ஈடுபட துவங்கியுள்ளனர்.

உலகில் காலநிலை மாற்றம், நிலம் மாசுபாடு, நீர் மாசுபாடு, காற்று மாசுபாடு மற்றும் பரவும் புதிய வகை வைரஸ் தொற்றுகள் என புதிது புதிதாக பிரச்சனைகள் எழுந்து வருகின்றன.

இந்த நெருக்கடிகளை சமாளிக்கவும், பசுமையான எதிர்காலத்தை உறுதி செய்யவும் புதிய மாசுகள் அல்லது கழிவுகளை குறைப்பதிலும், அதனை மறுசுழற்சி செய்வதிலும் நம் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

இன்றைய வாழ்க்கை முறையில் எலெக்ட்ரானிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. எலெக்ட்ரானிக் இல்லையென்றால் வாழ்வது சாத்தியமே இல்லை என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த பொருட்களால் பெருமளவில் மின்னணு கழிவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இத்தகைய மின்னணு கழிவுகளை அழிக்கவும், குறைக்கவும் போதுமான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை. இதனிடையே கோவையில் தன்னார்வ அமைப்பினர் சார்பாக மின்னணு கழிவுகளை சேகரித்து அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கழிவுகளை அழிப்பது மற்றும் மறு சுழற்சி செய்வது தொடர்பான திட்டம் கடந்த மாதம் துவங்கப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் சுமார் 20 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், மின்னணு கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

இதில் மின்னணு கழிவுகள் தேங்குவதால் உள்ள பாதிப்புகளையும், அதனை சேகரிப்பதன் அவசியம் குறித்தும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் சேகரித்த மின்னணு கழிவுகள் தன்னார்வ அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே போல் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும் மின்னணு கழிவுகள் வாங்கப்படும் என்றும், கல்லூரி மாணவர்களும் மின்னணு கழிவுகளை சேகரிக்க உள்ளதாகவும் தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News