ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் வின்டேஜ் கார்கள் அணிவகுப்பை பார்த்து பிரம்மித்த கார் லவ்வர்ஸ்..!

கோவையில் வின்டேஜ் கார்கள் அணிவகுப்பை பார்த்து பிரம்மித்த கார் லவ்வர்ஸ்..!

X
கோவை

கோவை பழக்கால கார் அணிவகுப்பு

Coimbatore Vintage car Show | கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள உள்ள தனியார் கிளப்பில் நடைபெற்ற இந்த வின்டேஜ் கார்களின் அணிவகுப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழையான கார்கள் பங்கேற்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை விழாவை முன்னிட்டு  பழமை வாய்ந்த வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

கோவை விழா கடந்த 2ம் தேதி தொடங்கி  வரும் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பல்வேறு அமைப்புகள், நிறுவனங்கள் இணைந்து பாரம்பரிய, கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கடந்த 2ம் தேதி வாலாங்குளத்தில் லேசர் விளக்குகள் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதனிடையே கோவையில் பழமை வாய்ந்த வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு நடைபெற்றது. கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள உள்ள தனியார் கிளப்பில் நடைபெற்ற இந்த வின்டேஜ் கார்களின் அணிவகுப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பழைய மாடல் பென்ஸ், பியட் உள்ளிட்ட பல்வேறு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்தன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அணிவகுப்பை மாவட்ட ஆட்சியர் சமீரன், மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மொத்தம் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் வரை சென்றதை ஆயிரக்காணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

First published:

Tags: Coimbatore, Local News