கோயம்புத்தூர் மாவட்டம் பள்ளேபாளையம் ஊராட்சிக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யாத குடிநீர் வழங்கல் அதிகாரிகளிடம் கிராம சபை கூட்டத்தின்போது பொதுமக்கள் சூழ்ந்துகொண்டு சராமாரியாக கேள்வி எழுப்பினர். அதனால் கூட்டத்தில் மாட்டி கொண்டு விழி பிதுங்கிய அதிகாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் பள்ளேபாளையம் ஊராட்சியில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ஊராட்சி மக்களுக்கு மூளையூர் என்ற இடத்தில் பவானி ஆற்றில் இருந்து குடி தண்ணீர் எடுத்து சம்பரவள்ளி கோவில் மேடு நீர் ஏற்று நிலையத்தில் இருந்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த ஊராட்சிக்கு வழங்க வேண்டிய தண்ணீரினை குடிநீர் வழங்கல் அதிகாரிகள் முறையாக வினியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன் சம்பரவள்ளி கோவில் மேடு பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தண்ணீரை திருட்டுத்தனமாக தோட்டங்களுக்கு வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் அங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்த குடிநீர் வழங்கல் அதிகாரி, பொதுமக்களிடம் வசமாக சிக்கி கொண்ட நிலையில் பொதுமக்கள் சராமாரியாக கேள்விகளை எழுப்பியதால் அதிகாரிக்கு என்ன செய்வது என தெரியாமல் மெளனமாக இருந்தார்.
பள்ளேபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் "எங்கள் ஊராட்சிக்கு வழங்க வேண்டிய தண்ணீர் எங்கே ? அதனை யாருக்க கொடுக்கிறீர்கள்’ என அதிகாரிகளை சூழ்ந்த பொதுமக்கள் கேள்விகளை எழுப்பினர். குடிநீர் முறையாக வராமல் இருப்பதற்கான காரணத்தை கூற வேண்டும் என வலியுறுத்தினர்.
வசமாக மாட்டிய அதிகாரி ஒரு கட்டத்தில் ’எங்களுக்கு மின்சாரம் ஒழுங்காக வழங்கப்படுவதில்லை. உயர் மின் அழுத்தம் வருவதால் தான் அடிக்கடி நீரை உறிஞ்சும் மோட்டார் டிரிப் ஆகி நின்று விடுகிறது. ஆகவே இந்த பிரச்சினையே மின்சாரத்துறையால் தான்" என்றார்.
மேலும், மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் அளித்துள்ளதாகவும், அவர்கள் பிரச்சனையை சரி செய்து தருவதாகவும் கூறினார்.
கடந்த வாரம் சம்பரவள்ளி கோவில் மேடு நீர் ஏற்று நிலையத்தில் உள்ள குடிநீர் வழங்கல் அதிகாரிகள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு வந்த நிலையில் அதனை ஊராட்சி மன்ற தலைவர்கள் சிலர் கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரத்துடன் கூறியதால் இரண்டு அதிகாரிகள் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
கோவை | காந்திபுரத்தில் அதிரடியாக ஆக்கிரப்புகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News