ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டிகள்..!!

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் பிள்ளையார் சுழி போட்ட சுட்டிகள்..!!

விஜயதசமி

விஜயதசமி

Coimbatore Latest News | கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் குழந்தைகளின் கல்வியைத் துவங்கும் விதமாக ஏடு துவங்குதல் என்று அழைக்கப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

விஜய தசமி முன்னிட்டு ஏடு துவங்குதல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோயிலில் நடைபெற்றது.

விஜயதசமி தினத்தன்று குழந்தைகள் கல்வியைத் துவங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது நம்பிக்கை. அதனடிப்படையில் கோவில்களில் விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்விகற்றல் தொடங்குவது வழக்கம்.

அதன்படி, கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் குழந்தைகளின் கல்வியைத் துவங்கும் விதமாக ஏடு துவங்குதல் என்று அழைக்கப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் படிக்க: பொன்னியின் செல்வன் போற்றும் பழையாறை - சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

இந்த நிகழ்ச்சியில் சின்ன சின்ன குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தமிழ் மொழியின் முதல் எழுத்தான அ, பிள்ளையார் சுழி, அம்மா, அப்பா என்று எழுத வைத்தனர்.

இன்றைய தினம் கல்வியைத் துவங்கினால் குழந்தைகள் படிப்பில் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கையால் கோவிலுக்கு அழைத்து வந்ததாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பெற்றோர், குழந்தைகள் வருகையையொட்டி சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Vijayadasami