Home /coimbatore /

குடியரசு துணை தலைவர் தமிழகம் வருகையில் திடீர் மாற்றம்

குடியரசு துணை தலைவர் தமிழகம் வருகையில் திடீர் மாற்றம்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை கோவை வருவதாக திட்டமிடப்பட்டு இருந்த பயணம் நாளை மாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று மாலை கோயம்புத்தூர் வருவதாக இருந்த நிலையில், திடீரென பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை மாலை அவர் கோவை வருகிறார். 

    குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காக இன்று மாலை  தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 

    இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , இந்தியாவின் துணை ஜனாதிபதி கோவைக்கு இன்று (14ம் தேதி) வருகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை 5 மணி முதல் 7.30 வரை அவினாசி சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகையால், விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மற்ற வேலைகளுக்கு செல்பவர்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டோ அல்லது மாற்று பாதையில் செல்லூமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    அதேபோல நாளை(15ம் தேதி) துணை ஜனாதிபதி அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காளப்பட்டி வழியாக ஊட்டிக்கு செல்லவுள்ளதால் இந்த வழித்தடத்தில் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை அவினாசி சாலை, காளப்பட்டி சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ஆகையால், விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் மற்ற வேலைகளுக்கு செல்பவர்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டோ அல்லது மாற்று பாதையில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    மேலும், இந்த இரண்டு நாட்களில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அவிநாசி சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் செல்ல அனுமது மறுக்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு நிகழ்ச்சிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை கோவை வருவதாக திட்டமிடப்பட்டு இருந்த பயணம் நாளை மாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல்,  குன்னூர் வெலிங்டன்னில் நாளை நடைபெற இருந்த நிகழ்வுகள் நாளை மறுதினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது
    Published by:Murugesh M
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி