முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையில் தயாராகும் ‘வஞ்சகன்’.. புதிய படத்துக்கு போட்டாச்சு பூஜை..

கோவையில் தயாராகும் ‘வஞ்சகன்’.. புதிய படத்துக்கு போட்டாச்சு பூஜை..

X
மாதிரி

மாதிரி படம்

Vanchagan Movie : வஞ்சகன் படத்தின் ஷூட்டிங், கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, மைசூர் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நடைபெற உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

வஞ்சகன் திரைப்படத்திற்கான பட பூஜை நிகழ்ச்சி கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

கனிஷ்கர் புரொடெக்‌ஷன்ஸ் ராமச்சந்திரன் தயாரிப்பில் இயக்குனர் சாய் ஆனந்த் இயக்கத்தில் வஞ்சகன் திரைப்படம் தயாராகிறது. இசையமைப்பாளர் தேவா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

இதில் படத்தின் கதாநாயகன் வசி, கதாநாயகிகள் டிவிங்கிள், விந்தியா மற்றும் கில்லி போக்கிரி ஆகிய படங்களில் நடித்த கராத்தே ராஜா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

கோவையில் தயாராகும் வஞ்சகன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    கிரைம் திரில்லர் கதையம்சம் கொண்ட வஞ்சகன் திரைப்படத்தில் பேஸ்புக் மூலம் நடைபெறும் குற்றங்கள், இதனால் பாதிக்கப்படும் மக்கள் குறித்து கரு இருக்கும் என்றும், படத்தின் ஷூட்டிங், கோவை பொள்ளாச்சி ஆனைமலை மைசூர் மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் நடைபெற உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News