முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: வால்பாறையில் அதிர்ச்சி

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்: வால்பாறையில் அதிர்ச்சி

சம்பவ இடத்திற்குச் சென்ற வால்பாறை காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து பள்ளியில் உணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவ இடத்திற்குச் சென்ற வால்பாறை காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து பள்ளியில் உணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சம்பவ இடத்திற்குச் சென்ற வால்பாறை காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து பள்ளியில் உணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை அரசு ஊராட்சி ஒன்றிய துவக்குப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 25 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகள் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோயம்பத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன் மோர் பகுதியில் அரசு ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் சுமார் 50 குழந்தைகள் பயின்று வருகின்றனர் இந்நிலையில் இன்று மதியம் வழக்கம் போல் இந்த குழந்தைகளில் 25 குழந்தைகள் மதிய உணவான சத்துணவு பள்ளியில் உட்கொண்டு உள்ளனர். 

பிறகு சுமார் 3 மணிக்கு மேல் ஒரு சில குழந்தைகளுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆசிரியர்கள் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பிறகு திடீரென மீண்டும் ஒவ்வொரு குழந்தைகளாக வாந்தி மற்றும் மயக்க நிலையில் சுருங்கி கீழே விழுந்துள்ளனர். அவர்களையும் மற்ற சக ஆசிரியர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

தற்போது 25 குழந்தைகளில் சுமார் 10 குழந்தைகள் ஓரளவு சுறுசுறுப்பாக உள்ளதாகவும் மீதமுள்ள 15 குழந்தைகள் மிகவும் சோர்வுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்குச் சென்ற வால்பாறை காவல் நிலைய போலீசார் இச்சம்பவம் குறித்து பள்ளியில் உணவு சமைப்பவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  மேலும் சில தினங்களாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால்  குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், அதை குடித்து குழந்தைகளுக்கு  வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

top videos

    செய்தியாளர்: ம.சக்திவேல் (பொள்ளாச்சி)

    First published:

    Tags: Food poison