ஹோம் /கோயம்புத்தூர் /

உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ படம் எப்படி இருக்கு..? கோவை மக்கள் கருத்து..

உதயநிதியின் ‘கலகத்தலைவன்’ படம் எப்படி இருக்கு..? கோவை மக்கள் கருத்து..

கலகத்தலைவன்

கலகத்தலைவன் படம் எப்படி இருக்கு..?

Udhayanithi Kalaga Thalaivan | சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கலகத் தலைவன்’ படம் குறித்து கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாந்தி தியேட்டரில் படம் பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கலகத் தலைவன்’ படம் குறித்து கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாந்தி தியேட்டரில் படம் பார்த்த மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் கலகத்தலைவன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நடிகரும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், பிக்பாஸ் பிரபலம் ஆரவ் வில்லன் கதாபாத்தித்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : கோவையில் வாக்கிங் சென்ற பெண்ணை தாக்கிய காட்டுயானை

கோவை நகரப்பகுதியில் மட்டும் இந்த படம் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனிடையே கோவை மத்திய ரயில் நிலையம் எதிரே உள்ள சாந்தி திரையங்கில் திரைப்படம் பார்த்தவர்கள், படம் எப்படி உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News