கோவை மாநகரில் இரண்டு நாள் சிறப்பு வரி வசூல் முகாம் நடை பெற உள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2022- 2023 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மக்களின் வசதிக்காக நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (22ஆம் தேதி) ஆகிய 2 நாட்கள் கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளன.
சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
கிழக்கு மண்டலம் 56, 57ஆவது வார்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூர் அரசுப் பள்ளி, திருச்சி சாலை மற்றும் 24ஆவது வார்டுக்கு உள்பட்ட கொடிசியா சாலையில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகம். மேற்கு மண்டலம் 35ஆவது வார்டுக்கு உள்பட்ட நீலியம்மன் நகர் 3ஆவது வீதி மற்றும் நாகாத்தம்மன் கோயில் வளாகம். 40ஆவது வார்டில் பொங்காளியூர் மாநகராட்சிப் பள்ளி, 34ஆவது வார்டில் பூம்புகார் நகர், மணி மகால் மண்டபம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தெற்கு மண்டலம் 76ஆவது வார்டில் பாரதி சாலை, சாஸ்தா நகர், 77ஆவது வார்டில் ராம மூர்த்தி சாலை, இ.பி.காலனி, 89ஆவது வார்டில் பள்ளிக்கடை வீதி மாநகராட்சி வார்டு அலுவலகம்.வடக்கு மண்டலம் 28ஆவது வார்டுக்கு உள்பட்ட காமதேனு நகர் மாநகராட்சி வார்டு அலுவலகம், 19ஆவது வார்டு மணியகா ரன்பாளையம் அம்மா உணவ கம்.
Must Read : அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் டூரிசம்.. குண்டாறு அணையில் கேம்ப் ஸ்டே.. மெருகேறப்போகும் குற்றாலம்..
மத்திய மண்டலம் 32ஆவது வார்டு சிறுவர் பூங்கா, ரத்தினபுரி, 63ஆவது வார்டு ஒலம்பஸ் 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84ஆவது வார்டு ஜி.எம்.நகரில் உள்ள தர்க்கத் இஸ்லாம் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாமை மக்கள் பயன்ப டுத்தி, மாநகராட் சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, House Tax, Local News, Property tax