ஹோம் /கோயம்புத்தூர் /

சேலம் - கோவை வழித்தடத்தில் நாளை முதல் ரயில்கள் முற்றிலும் நிறுத்தம்...! காரணம் என்ன?

சேலம் - கோவை வழித்தடத்தில் நாளை முதல் ரயில்கள் முற்றிலும் நிறுத்தம்...! காரணம் என்ன?

கோவை ரயில் நிலையம்

கோவை ரயில் நிலையம்

Coimbatore | நாளை (31ம் தேதி) முதல் அடுத்த மாதம் 29ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்பட இருக்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

சேலம் - கோவை தினசரி ரயில் நாளை(31ம் தேதி) முதல் அடுத்த மாதம் 29ம் தேதி வரை முற்றிலும் நிறுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் - கோவைக்கு தினசரி ரயில் (எண்.06803) சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஆனது, ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றி வருகிறது. அதேபோல், கோவை - சேலம் தினசரி ரயில் (எண்.06802) கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும்.

இந்நிலையில், நாளை (31ம் தேதி) முதல் அடுத்த மாதம் 29ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்பட இருக்கிறது. இந்த இரண்டு ரயில்களும் முற்றிலும் நிறுத்தப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : தாய் கொடூரமாக தாக்கியதில் 2 வயது குழந்தை உயிரிழப்பு...

மேலும், ஈரோடு ரயில் நிலையம் அருகே பொறியியல் பணி நடைபெறுவதால் நாளை (31ம் தேதி) முதல் அடுத்த மாதம் 29ம் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், இந்த ரயில்களை நம்பி இருந்த கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்ட கல்லூரி, அரசு, தனியார் தொழில் நிறுவன ஊழியர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News