ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்.. பொறியாளர்களுக்கு பயிற்சி!

கோவையில் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்.. பொறியாளர்களுக்கு பயிற்சி!

கோவையில் பொறியாளர்களுக்கு பயிற்சி

கோவையில் பொறியாளர்களுக்கு பயிற்சி

Coimbatore District News : கோவையில் 24 மணி நேர குடிநீர் திட்டம் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்பாடுகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் பீளமேடு அவிநாசி சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில், அம்ரூத் திட்டம் மற்றும் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்பாடுகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம்  தொடங்கியது. இதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

இந்த கருத்தரங்க கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பேசியதாவது, “கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைத்திட வழிவகை செய்தல், குடிநீரை 24 மணி நேரமும் வழங்குதல், குடிநீரை சேமித்தல், உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதையும் படிங்க : கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் 1 பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் 24 மணி நேர குடிநீர் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நகராட்சி, பேரூராட்சி இயக்குநர் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து 80 மேற்பட்ட பொறியாளர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளார்கள்.

இவர்களுக்கு கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி, வடவள்ளி-கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் திட்ட பணிகள் நடைபெற்றுவருவது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் 24 மணி நேரமும் குடிநீர் திட்டத்தில் ஜெராம் நகர் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் செயல்பாடுகள், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள், அதில் ஏற்படும் இன்னல்கள் என்னென்ன என்பது குறித்தும் விளக்கப்படுகிறது. 2 நாள் நடைபெறும் இந்த பயிற்சி மற்றும் கருத்தரங்கை பொறியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்” என பேசினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Coimbatore, Local News