முகப்பு /கோயம்புத்தூர் /

ஆர்.டி.ஐ. பயன்படுத்துவது எப்படி? கோவையில் பயிற்சி வகுப்பு!

ஆர்.டி.ஐ. பயன்படுத்துவது எப்படி? கோவையில் பயிற்சி வகுப்பு!

பயிற்சி வகுப்பு

பயிற்சி வகுப்பு

Coimbatore News | தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவைராமநாதபுரம் பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ துவக்கப்பள்ளியில் கோவை மாவட்ட ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் சார்பில் தகவல் பெறும் உரிமைச்சட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் மதுரை ஆர்.டி.ஐ ஹக்கீம் பங்கேற்று தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வரலாறு, மனு எழுதும் முறை, அதிலுள்ள பிரிவுகள், மேல் முறையீடு வழிமுறைகள், தகவலை எவ்வாறு பெறுவது, பெறப்பட்ட தகவல்களை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளித்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து தெரிந்து கொண்டனர். மேலும் பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் கூறுகையில், தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் உள்ளது என்றும், இந்த சட்டத்தை முறையாக பயன்படுத்தினால் அரசு இயந்திரம் முறையாக இயங்குவதோடு, மக்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்ட முடியும் என்றனர்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News, RTI