ஹோம் /கோயம்புத்தூர் /

ஹெல்மெட் போடாம போகாதீங்க கோவை மக்களே..! தீவிர தணிக்கையில் போலீசார்..!

ஹெல்மெட் போடாம போகாதீங்க கோவை மக்களே..! தீவிர தணிக்கையில் போலீசார்..!

ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்த போலீசார்

ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்த போலீசார்

Coimbatore News : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்யும் பொருட்டு ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகரில் அனைவரும் ஹெல்மெட் அணிவதை 100 சதவிகிதம் உறுதி செய்யும் பொருட்டு மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் மேற்பார்வையில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஹெல்மெட் அணிவது முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி  லட்சுமி மில்ஸ் சிக்னலில் உதவி ஆய்வாளர் சரவணன் ஹெல்மெட் அணியாதவர்களை பிடித்து அபராதம் விதித்தார். மேலும் ஹெல்மெட் அணிவதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். அதுமட்டுமின்றி வாகனங்களின் ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் வரும் வாலிபர்கள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும். அவர்களது பெற்றோர்களை தொடர்பு கொண்டு ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுமாறு அவர்களது மகன் மகள்களுக்கு அறிவுரை வழங்குமாறு எடுத்துரைக்கப்படும். அதிவேகமாக வாகனங்களில் சென்றால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News