முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை - அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியை பயன்படுத்துங்க..

கோவை - அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியை பயன்படுத்துங்க..

மாதிரி படம்

மாதிரி படம்

Coimbatore News : கோவை - அவினாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை - அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிட்ரா சந்திப்பு, ஹோப்காலேஜ், அண்ணாசிலை மற்றும்நவ இந்தியா ஆகிய 4 இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்படுகின்றன.

மொத்தம் 306 தூண்களில் 280 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. தற்போது எஸ்ஸோ பங்க் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள சாலையின் மைய ப்பகுதியில் தூண்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த நிலையில் மேம்பால கட்டுமாண பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் நடைபெறும் மேம்பால பணி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'அவிநாசி சாலை எஸ்ஸோ பங்க் பகுதியில் மேம்பால தூண் கட்டப்பட்டு வருகிறது. எனவே, பாரதிகாலனி பகுதியில் இருந்து அவிநாசி சாலையை அடையும் வாகனங்கள், அவிநாசி சாலையில் இடதுபுறமாக திரும்பி பில்லர் எண் 183-184 ஆகியவற்றுக்கு இடையே ‘U’டர்ன் செய்து செல்லலாம். பீளமேடு வழித்தடத்திலிருந்து வந்து பாரதிகாலனி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டு நர்கள் சுகுணா திருமண மண்டபத்துக்கு எதிரில் உள்ள பில்லர் எண் 197-198-க்கு இடையே ‘U’ டர்ன் செய்து செல்லாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News