முகப்பு /கோயம்புத்தூர் /

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா - கோவையில் போக்குவரத்து மாற்றம்

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா - கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவையில் போக்குவரத்து மாற்றம்

கோவையில் போக்குவரத்து மாற்றம்

Coimbatore District | கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருக்கும் சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் இன்று (புதன் கிழமை) மாலை 4 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக, மேட்டுப்பாளையம் சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் இடது புறம் திரும்பி பாரதி பார்க் ரோடு ஜி.சி.டி., தடாகம் ரோடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடையலாம்.

கோவையில் இருந்து சிந்தாமணி, ஹோம் சைன்ஸ் வழியாக கோவிலுக்கு வரும் வாகனங்கள் பாரதிபார்க் ரோட்டில் இருந்து வலதுபுறம் திரும்பி ராஜா அண்ணாமலை ரோடு வழியாக, ராமலிங்கம் செட்டியார் பள்ளி வளாகத்தில், வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.

மேட்டுப்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் இருந்து கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், சங்கனூர் சோதனைச்சாவடியில் இடது புறம் திரும்பி, கண்ணப்ப நகர் புறக்காவல் நிலையம், தயிர் இட்டேரி, சிவானந்தா காலனி வழியாக நகருக்குள் வரலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவிலுக்கு வரும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும் மேட்டுப்பாளையம் புதிய பஸ் நிலையம், அதற்கு அருகில் உள்ள பூண்டு குடோன் வாகனம் நிறுத்தும் இடங்களிலும், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் ஹிப்கோ மோட்டார் கம்பெனி வளாகத்திலும் நிறுத்திவிட்டு, கோவிலுக்கு செல்லலாம்.

Must Read : திருநெல்வேலி பகுதியில் உள்ள சிறப்புவாய்ந்த நவகைலாய கோவில்கள் பற்றி தெரியுமா?

இதனால், மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்தை தாண்டி மாலை 4 மணிவரையில் எந்த வாகனங்களும் செல்ல இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Saibaba, Traffic