ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் போக்குவரத்து மாற்றம் - நெரிசலை தவிர்க்க இந்த பாதையை பயன்படுத்துங்க.!

கோவையில் போக்குவரத்து மாற்றம் - நெரிசலை தவிர்க்க இந்த பாதையை பயன்படுத்துங்க.!

கோவை

கோவை

Traffic Change In Coimbatore | கோவையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு தற்போது, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  பொது மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பிக்க இந்த வழித்தடங்களை பயன்படுத்துங்கள் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் பொருட்டு தற்போது, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் தப்பிக்க இந்த வழித்தடங்களை பயன்படுத்துங்கள் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க ; கோவையில் தொடரும் பதற்றம் : நகர்முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு..!

கோவை அவினாசி ரோட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் 10.10 வரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலை துறையின் சார்பில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதற்காக மொத்தம் 306 தூண்கள் அமைக்க திட்டமிடப்பட்டு, 276 தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. லட்சுமி மில் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஏறு மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஜி.கே.என்.எம். சிக்னல் சந்திப்பு பகுதியில் தூண்கள் அமைக்கப்படுவதால், அங்கு வழித்தடம் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஜி.கே.என்.எம். ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் அண்ணா சிலை சந்திப்பு நோக்கி செல்ல வேண்டுமானால், லட்சுமி மில் சிக்னல் வரை சென்று திரும்ப வேண்டியது இருந்தது.

இதேபோல், லட்சுமி மில் சிக்னல், அரசு விருந்தினர் மாளிகை ரோட்டில் இருந்து வருபவர்கள் அண்ணா சிலை சந்திப்புக்கு சென்று திரும்பி ஜி.கே.என்.எம். சாலைக்கு செல்ல வேண்டியது இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். இதனையடுத்து, அவினாசி ரோட்டில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க ; கோவையில் இந்து‌ முன்னணி பொறுப்பாளர் காருக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. காவல்துறையினர் விசாரணை

இதுகுறித்து மாநகர போக்குவரத்து பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதாவது:

லட்சுமி மில் சிக்னலில் இருந்து ஜி.கே.என்.எம். ரோட்டிற்கு செல்லும் வாகன ஓட்டிகள், பி.ஆர்.எஸ். மைதான நுழைவு வாயில் முன்பு ரோட்டின் நடுவில் ஏற்படுத்தப்பட்டுள்ள இடைவெளியில் திரும்பி செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இந்த வழியில் இருசக்கர வாகனம் மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டும். பெரிய வாகனங்கள் வழக்கம்போல் அண்ணா சிலை சந்திப்புக்கு சென்று திரும்பி வர வேண்டும். இதேபோல், ஜி.கே.என்.எம். சந்திப்பில் இருந்து வருபவர்கள் அரசு விருந்தினர் மாளிகை ரோடு சந்திப்பு அருகே திரும்பி அரசு விருந்தினர் மாளிகை ரோட்டிற்கோ அல்லது அண்ணா சிலை சந்திப்புக்கோ செல்லலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேநேரம் அரசு விருந்தினர் மாளிகை ரோட்டில் இருந்து லட்சுமி மில் சிக்னல் நோக்கி வருபவர்களுக்கு இதில் திரும்ப அனுமதியில்லை என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News