முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..! இந்த வழியை பயன்படுத்துங்க..!

கோவையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்..! இந்த வழியை பயன்படுத்துங்க..!

X
மாதிரி

மாதிரி படம்

Traffic change in Coimbatore : கோவையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் சிந்தாமணி - பெரியசாமி ரோடு கிழக்கு, பாஷியகாரலு ரோடு கிழக்கு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக கோவை மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கோவை, சிந்தாமணி சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

(1) மேட்டுப்பாளையம் ரோடு சிந்தாமணி சந்திப்பு வழியாக D.B.ரோடு, வடவள்ளி, மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம் செல்லும் வாகனங்கள், கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக, செல்ல தடை செய்யப்படுகிறது.

கோவையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

மாற்றாக, கிழக்கு பாஷியகாரலு ரோடு வழியாக சென்று, தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

(2) கிழக்கு பெரியசாமி ரோடு வழியாக, சிந்தாமணி சந்திப்பு மேட்டுப்பாளையம் ரோட்டிற்கு செல்லும் வாகனங்கள், வழக்கம் போல் தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு, பொது மக்கள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது”  இவ்வாறு மாநகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News, Traffic