ஹோம் /கோயம்புத்தூர் /

வண்டியில் ஏறிய எமன்.. ஷாக் அடைந்த கோவை வாகன ஓட்டிகள்..!

வண்டியில் ஏறிய எமன்.. ஷாக் அடைந்த கோவை வாகன ஓட்டிகள்..!

X
கோவையில்

கோவையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வாரம்

Coimbatore Road Safety Week | கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை நடத்த திட்டம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எமன் வேடமணிந்த நபர் சாலை விதிகளை மதிக்காமல் பயணம் செய்வோர் வாகனங்களில் ஏறி அமர்ந்த சம்பவம் காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்தியது.

கோவையில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி கோவை லட்சுமி மில்ஸ் சிக்னல் பகுதியில் தன்னார்வ தொண்டு அமைப்பினர் மற்றும் கோவை மாநகர போலீசார் இணைந்து வித்தியாசமான முறையில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடன அசைவுகளுடன் வாகன ஒட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. இதில் எம தர்மன் வேடமணிந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரின் பின்புறம் ஏறி அமர்ந்து கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிகழ்வில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்தும் பாதுகாப்பான பயணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் போக்குவரத்து துணை ஆணையாளர் மதிவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பல்வேறு தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்று உள்ளதாக தெரிவித்தார். மேலும், வரும் 15ம் தேதி கோவை மாநகரிலுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள் அனைவருக்கும் கண் மருத்துவமனைகள் மூலம் கண் பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore, Local News