ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதில் உங்கள் பகுதி இருக்கிறதா?

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதில் உங்கள் பகுதி இருக்கிறதா?

மின்தடை

மின்தடை

Coimbatore District | கோயம்புத்தூர் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவம்பர் 17) மின்தடை ஏற்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செஞ்சிக்கோங்க.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு, தாளக்கரை முத்துார் ஆகிய துணைமின் நிலைய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின்தடை செய்யப்படும் என செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணிகள் நடக்க இருக்கின்றன. இவை சரி செய்யப்பட்ட பின்னர் சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

எனவே, இந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் தடைசெய்யப்படவுள்ளது. இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் தங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க:  வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. கோவையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கிணத்துக்கடவு பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்:

கிணத்துக்கடவு, வடபுதுார், கல்லாபுரம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், முத்துக்கவுண்டனுார், கல்லாங்காட்டுபுதுார், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதுார், நெ.10 முத்துார், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி கோடங்கிபாளையம்.

Must Read : செவ்வாய் தோஷம், நாக தோஷம் நீங்கவும், சுகப்பிரசவத்திற்காகவும் திருச்சியில் வணங்க வேண்டிய கோவில்!

பொள்ளாச்சி தாளக்கரை முத்தூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்:

அய்யம்பாளையம், முத்துார், நல்லுார், வடுகபாளையம், மண்ணுார், ராமபட்டிணம், வெள்ளையகவுண்டனுார், கொசுமடை, ராமநாதபுரம், ஜலத்துார், தேவம்பாடி, டி.காளிபாளையம், களத்துபுதுார், செல்லாண்டிகவுண்டன்புதுார், நல்லுாத்துக்குளி, ஒரக்கலியூர், போடிபாளையம், குளத்துார், பொன்னாயூர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, முருகன் நிலையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்தி நகர், டி.நல்லிக்கவுண்டன்பாளையம், ஆர்.பொன்னாபுரம், ஆ.சங்கம்பாளையம், வேலவன் நகர், சக்தி மில் பின்பக்கம், சிங்காரவேலன் காலனி, ஜெ.ஜெ. காலனி, வெங்கடேஷ் காலனி, சேரன் தொழிலாளர் காலனி, சரஸ்வதி அவென்யூ மற்றும் பெருமாள் நகர் பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown