Home /coimbatore /

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்பில், பிஹெச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்பில், பிஹெச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்பில், பிஹெச்டி படிப்புகளுக்கு விண்ணப்பிக்க நாளைதான் கடைசி நாளாகும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    எம்பில் மற்றும் பிஹெச்டி படிப்புகளில் சேர நாளை (ஆகஸ்ட் 10) விண்ணப்பிக்க கடைசி நாளாகும் என்று கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த படிக்களில் சேர ஆன்லைனில் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.

    கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 100ம் மேற்பட்ட அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியாா் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    பல்கலைக்கழகத்திலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்வி நிறுவனங்களிலும் எம்பில், பிஹெச்.டி படிப்புகள் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் நடத்தப்படுகின்றன. இப்படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தோ்வு நடத்தப்பட்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

    2022-2023-ம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தோ்வு ஆகஸ்ட் 29ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த ஆண்டும் நுழைவுத் தோ்வு ஆன்லைனில் நடக்கிறது.

    விண்ணப்பம், தோ்வுதொடா்பான சந்தேகங்களுக்கு 0422-2428311, 2428318 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி