Home /coimbatore /

எகிறும் தக்காளி விலை.. கோவை மக்கள் ஆதங்கம்..!

எகிறும் தக்காளி விலை.. கோவை மக்கள் ஆதங்கம்..!

தக்காளி

தக்காளி விலை உயர்வால் மக்கள் அவதி

Coimbatore District: கோவையில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

    அன்றாட சமையலுக்குத் தேவையான முக்கியமான உணவுப் பொருளாக தக்காளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பனிக்காலத்தின் போது தக்காளி பூக்கள் கருகியும், உதிர்ந்தும் விடுவதால் அந்த காலகட்டத்தில் விலை அதிகரித்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.

    இந்த காலத்தில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் பழத்தின் விலையும், தக்காளியின் விலையும் ஒரே அளவில் இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்தாண்டு சமூகவலைதளங்களில் வைரலானது நினைவிருக்கலாம்.

    இதனிடையே மழைக்காலம் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், கோவையில் தற்போது முதலே தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    கோவையில் உள்ள காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் இன்னும் விலை அதிகரித்து காணப்படுகிறது. உணவில் தக்காளி சேர்க்காவிட்டால் சுவையே இருக்காது என்றும், இப்போது வேறு வழி இல்லாமல் புளியைக் கரைத்து தான் சமைக்க வேண்டும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் இல்லத்தரசிகள். மேலும் எலுமிச்சம் பழங்களும் விலை அதிகரித்துள்ளது.

    இதனிடையே, தக்காளி பயிர் நஷ்டத்தை ஏற்படுத்திவிடுவதால் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பயிரிடாமல் இருந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதியாவதுமே இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இதனால் வரும் விலையேற்ற பாதிப்பு 10 சதவீதம் என்றால், 20 முதல் 30 சதவீதம் வரை விலையை ஏற்றிவைத்து வியாபாரிகள் விற்பனை செய்வதாகவும், இதனை அரசு முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் கோவை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    செய்தியாளர் : சௌந்தர்மோகன்.
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore

    அடுத்த செய்தி