ஹோம் /கோயம்புத்தூர் /

ஆட்சியர் அலுவலகத்தை தக்காளி சந்தையாக்கிய விவசாயிகள்.. கோவையில் நூதன போராட்டம்

ஆட்சியர் அலுவலகத்தை தக்காளி சந்தையாக்கிய விவசாயிகள்.. கோவையில் நூதன போராட்டம்

விவசாயிகள்

விவசாயிகள் நூதன போராட்டம்

Coimbatore News: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நூதன போராட்டம் நடத்தினர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று தக்காளி விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தக்காளியை விற்பனை செய்து நூதனபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளிக்க வந்தனர். தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது.

தக்காளி

இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள். மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டமும் இடைத்தரகர்களுக்கு லாபம் வருகிறது.  இந்த போக்கை அரசு கண்டிக்க வலியுறுத்தவே இந்த போராட்டம். மேலும் இந்த போராட்டத்தின் மூலம் வசூலாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புகிறோம் " என தெரிவித்தார்.

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Farmers, Local News, Tomato