ஹோம் /கோயம்புத்தூர் /

"வாங்க வணக்கமுங்க.." கோயம்புத்தூருக்கு இன்னைக்கு 218-வது பிறந்தநாள்.. என்ன புடிச்சிருக்கு - மக்கள் கருத்து

"வாங்க வணக்கமுங்க.." கோயம்புத்தூருக்கு இன்னைக்கு 218-வது பிறந்தநாள்.. என்ன புடிச்சிருக்கு - மக்கள் கருத்து

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

Coimbatore News: எந்த ஊரில் இருந்து வந்தவருக்கும் சொந்த ஊர் போன்ற உணர்வைக் கொடுக்கும் இந்த கோவை மண்ணைகொண்டாடுவோம்..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் கோயம்புத்தூர். தென்னிந்தியாவின் மான்செஸ்டரான இந்த ஊர் செல்லமாகவும், சுருக்கமாகவும் கோவை என்று அழைக்கப்படுகிறது.

தென்னிந்தியாவில் சென்னை, ஹைதராபாத், பெங்களூருக்கு அடுத்த நான்காவது மிகப்பெரிய மாநகரமும் இந்த கோவை மாநகரம் தான். இது இந்தியாவின் 11வது பெரிய மாநகரமாகவும் உள்ளது.

தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும், மேம்பட்ட நிலையில் உள்ள கோவைக்கு இன்று 218வது பிறந்தநாள். கடந்த 1804 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சியில் நவம்பர் மாதம் 24-ம் தேதி கோவைக்கு மாவட்ட அந்தஸ்து கிடைத்தது. அப்போது முதல் ஆண்டுதோறும் நவம்பர் 24ம் தேதி கோவை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர்

சிறுவாணி தண்ணீரும், சில்லென்ற காற்றும், மரியாதையான பேச்சும் கோவையில் அடையாளமாக உள்ளது. "வாங்க வணக்கமுங்க" என்ற கரிசனையும், மரியாதையும் கலந்த உபசரிப்புகளுக்கு கோவையில் என்றுமே பஞ்சமில்லை.

எந்த ஊர் சென்றாலும் சொந்த ஊர் போல் ஆகாது என்பார்கள்.. எந்த ஊரில் இருந்து வந்தவருக்கும் சொந்த ஊர் போன்ற உணர்வைக் கொடுக்கும் இந்த கோவை மண்ணைகொண்டாடுவோம்..

Published by:Ramprasath H
First published:

Tags: Coimbatore, Local News, Tamil News