ஹோம் /கோயம்புத்தூர் /

மின் கட்டணத்தை ஆப், இணையம் மூலம் செலுத்த கோரிக்கை 

மின் கட்டணத்தை ஆப், இணையம் மூலம் செலுத்த கோரிக்கை 

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

மின் கட்டணத்தை ஆப், இணையம் மூலம் செலுத்துவதற்கு மின்சார வாரியம் ஊக்குவிக்கிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Coimbatore, India

  மின் கட்டணம் செலுத்த ஆப் மற்றும் இணையத்தை பயன்படுத்துமாறு மின்வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  கோவை மின் பகிர்மான வட்டமேற்பாா்வை பொறியாளா் நக்கீரன்

  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மின் கட்டணத்தை பொது மக்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்கு நேரில் வந்து செலுத்தி வருகின்றனர். அவர்கள் கட்டணத்தை எளிதாக 24 மணி நேரமும் செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  அவர்கள் இருந்த இடத்தில் இருந்தே கைபேசி மூலமும் இணைய சேவை வழியாகவும் செலுத்த முடியும். அதன்படி, மின் கட்டணத்தை இணையதளம், கைப்பேசி மற்றும் போன் பே, பே.டி.எம், ஜி.பே,

  டான்ஜெட்கோ ஆகிய செயலிகளின் மூலமாகச் செலுத்த முடியும். இணையம் மற்றும் செயலிகள் மூலம் கட்டணத்தை செலுத்துமாறு கேட்டு கொண்டுள்ளார். இதன் மூலம் கட்டணத்தை எளிதாகவும் விரைவாகவும் செலுத்த முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Karthick S
  First published:

  Tags: Coimbatore, Local News