ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை வழியாக வரும் இந்த ரயில்களுக்கு நேரம் மாற்றம் - ரயில்வே நிர்வாகம் தகவல்!

கோவை வழியாக வரும் இந்த ரயில்களுக்கு நேரம் மாற்றம் - ரயில்வே நிர்வாகம் தகவல்!

கோவை

கோவை

Coimbatore District News : கோயம்புத்தூர் வழியாக செல்லும் முக்கிய ரயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை வழியாக கா்நாடக மாநிலம் விஜயபுரா - கேரள மாநிலம் கோட்டயம் இடையே செல்லும் ரயில்களுக்கு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்துக்கு நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 16ம் தேதி வரை திங்கள் கிழமைகளில், கா்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07385) வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

பிறகு, புதன் கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோல் நவம்பா் 23ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை புதன்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07386) வியாழக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு விஜயபுராவை சென்றடையும்.

இதையும் படிங்க : தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள 19 காட்டுயானைகள்.. பீதியில் பொதுமக்கள் - வனத்துறை எச்சரிக்கை

இந்த ரயில், எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், தும்கூா், திப்தூா், பிரூா், ஹரிஹா், ராணிபென்னூா், பாகல்கோட், அல்மட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோன்று கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ஆலப்புழா - சென்னை விரைவு ரயில், போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12602) மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக 1.35 மணிக்குப் புறப்படும். இந்த ரயில் போத்தனூருக்கு இரவு 9.55 மணிக்கும், திருப்பூருக்கு 10.45 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.40 மணிக்கும் சென்றடையும். சென்னைக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு சென்றடையும். இவ்வாறு சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News