ஹோம் /கோயம்புத்தூர் /

குடியரசு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

X
கோவை

கோவை ரயில் நிலையத்தில் சோதனை

Coimbatore | குடியரசு தினத்தை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு jபோடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாநகரில் குடியரசு தின விழா நடைபெற்ற வ.உ.சி மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

மேலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ரயில் நிலையத்தில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்தார். ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் எவ்வாறு பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள் என கேட்டறிந்தார்.

மேலும் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பேசி காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ‘கோவை மாநகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய ரயில் நிலையம், போத்தனூர், சிங்காநல்லூர், வடகோவை ரயில் நிலையங்கள், காந்திபுரம், சிங்காநல்லூர் பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. பயணிகளின் உடைமைகளும் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகள் பாதுகாப்புக்கு எந்தவித சுணக்கமும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பார்சல்கள் அனைத்தும் திறந்து பார்த்த பின்னரே அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடியரசு தினம் முடியும் வரை இந்த நடைமுறைகள் இருக்கும். பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளார்கள்.

சைக்கிளில் சென்ற சிறுவனை அடித்து தூக்கிய கார்.. பதைபதைக்கும் காட்சி.. கோவையில் பயங்கரம்!

மாநகரில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். லாட்ஜ்களில் சோதனை நடைபெற்று வருகிறது. அங்கு தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விபரங்களை சேகரிக்காத லாட்ஜ் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகர எல்லைகளில் உள்ள 11 சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாநகர முக்கிய இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகன சோதனை மேற்கொள்ளப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Coimbatore, Local News